அதிர்ச்சி வீடியோ...பெட்ரோல் பாக்கெட்டுகள் வெடித்து 33 பேர் பலி.. 12 பேர் கவலைக்கிடம்!!

 
தீவிபத்து

பெட்ரோல்,டீசல் ஆகியவை  வண்டிகளில் மட்டுமே நிரப்பப்படும். கேன்களில் கிடையாது என பல பங்க்குகளில் போர்டு மாட்டப்பட்டிருக்கும். இதனால் சில அசம்பாவிதங்கள் நிகழக்கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறை. ஆப்ரிக்காவில், நைஜீரியாவின் அண்டை நாடான பெனினில், வணிக நிறுவனம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.


 

மளமளவென பற்றிய தீ, அருகில் இருந்த கடைகள் மற்றும் குடியிருப்புகளில் பரவியது. இந்த கோர தீவிபத்தில் 2 குழந்தைகள் உட்பட 33 பேர் பலியாகினர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை விரைந்து வந்து தீயை   நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். 12 பேர்  படுகாயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

தீவிபத்து


இந்நிலையில், வணிக நிறுவனம் ஒன்றில் பெட்ரோல் பாக்கெட்களை திறக்கும் போது தீ விபத்து ஏற்பட்டதாக பெனின் மேயர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை நடைபெற்றது தான்  இந்த விபத்திற்கு காரணம் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக்குரல்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web