துறைமுகத்தில் நாட்டுப் படகில் பயங்கர தீ விபத்து... ரூ.35லட்சம் மதிப்பில் சேதம்!
தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தியிருந்த நாட்டுப் படகு தீப்பிடித்து எரிந்ததில் ரூ.35லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் பார்த்திபன். மீனவர், இவர் தனது நாட்டுப் படகை, திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் முத்தரையர் நகர் வடக்கு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாட்டுப் படகில் தீ விபத்து ஏற்பட்டதாம்.

இந்த விபத்தில் ரூ.20 லட்சம் நாட்டுப் படகு மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமாகின. இது குறித்த புகாரின் பேரில் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். தங்களது வாழ்வாதாரமாக இருந்த படகு சேதமானதால், மீன்வளத்துறை உடனடியாக இதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்த்திபன் கோரிக்கை விடுத்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
