அதிர்ச்சி வீடியோ... பழ மார்க்கெட்டில் தீ விபத்து... 20 பழக்கடைகள் தீயில் கருகி நாசம்!
தெலுங்கானாவில் ஹுசூராபாத் நகரில் அம்பேத்கர் சௌக்கில் வணிக மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக பழக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
అర్థరాత్రి హుజురాబాద్ పట్టణంలో అంబేద్కర్ చౌరస్తాలో షార్ట్ సర్క్యూట్ వల్ల అగ్ని ప్రమాదంతో చిన్న చిన్న దుకాణాలు ఖాళీ పోయాయి
— Telugu Galaxy (@Telugu_Galaxy) July 16, 2024
నష్ట పోయిన చిరు వ్యాపారస్థులను ఆదుకోవాలని మంత్రి పొన్నం ప్రభాకర్ అధికారులను ఆదేశించినట్లు సమాచారం#Huzurabad #PonnamPrabhakar #KARIMNAGAR #Telangana pic.twitter.com/4tIGkQ0Mu3
தீ விபத்தை அடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றும் அணைக்க முடியவில்லை. காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தது. இந்த தீ விபத்தில் 16 பழக்கடைகள், 9 கடைகள் மற்றும் ஏழு சிறிய வாழை ஏற்றி செல்லும் வண்டிகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நஷ்டமடைந்த சிறு வியாபாரிகளுக்கு உதவும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
