நாடு முழுவதும் ரூ.7,000 கோடி பட்டாசு விற்பனை... 20% அதிகரிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மிகுந்த உற்சாகமாக நடைபெற்றது. மொத்தமாக ரூ.7,000 கோடிக்கு மேல் பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பட்டாசு விற்பனை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

சிவகாசி உற்பத்தியாளர்கள் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு சந்தை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இயங்கியது. சுற்றுச்சூழல் நட்பு பட்டாசுகளுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, 2026ஆம் ஆண்டில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், உச்சநீதிமன்றம் டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அங்கு மட்டும் ரூ.400 கோடி மதிப்பிலான பட்டாசுகள் அனுப்பப்பட்டன. இதனால் தீபாவளி சந்தையில் பட்டாசு விற்பனை புதிய சாதனை படைத்துள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
