பெரும் பரபரப்பு.. காவல் நிலையத்திலேயே துப்பாக்கிச் சூடு.. கூட்டணி கட்சியினரையே சுட்ட பாஜக எம்.எல்.ஏ..!

 
பா.ஜ.க. எம்எல்ஏ கன்பட் கெய்க்வாட்

தானே மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம், கல்யாண் தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ கன்பட் கெய்க்வாட். இவருக்கும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் கல்யாண் தொகுதி பொறுப்பாளர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே நிலத்தகராறு உள்ளது. உல்ராஸ் நகர் பகுதியில் உள்ள வரில் லைன் காவல் நிலையத்தில் எம்எல்ஏ புகார் அளித்துள்ளார். கன்பட் கெய்க்வாட்டின் மகன் நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார்

Maharashtra | Bharatiya Janata Party MLA arrested for shooting, injuring Shiv  Sena leader inside police station in Maharashtra - Telegraph India

அப்போது மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் எதிர்புறம் வந்தனர். தகவலறிந்த எம்எல்ஏ கன்பட் கெய்க்வாட்டும் அங்கு விரைந்தார். காவல் நிலைய மூத்த ஆய்வாளர் அறையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கைகலப்பு ஏற்பட்டது, எம்.எல்.ஏ. கன்பட் கெய்க்வாட் தனது துப்பாக்கியை எடுத்து எதிர் தரப்பினரை நோக்கி சுட்டார்.

மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது உதவியாளர் காயமடைந்தனர். இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Maharashtra: Police Arrest BJP MLA Ganpat Gaikwad, Two Associates for  Shooting at Eknath Shinde Shiv Sena Leader Mahesh Gaikwad in Ulhasnagar;  High-Level Inquiry Ordered | LatestLY

இது குறித்து எம்.எல்.ஏ. என் கண்ணெதிரே எனது மகன் தாக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாமல் துப்பாக்கியால் சுட்டார். மேலும், "மகாராஷ்டிராவில் குற்றவாளிகளின் சாம்ராஜ்யத்தை முதல்வர் ஷிண்டே உருவாக்கி வருகிறார். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தால் மாநிலத்தில் குற்றவாளிகள்தான் தோன்றுவார்கள். இன்று என்னைப் போன்ற நல்லவனை குற்றவாளியாக்கிவிட்டார்" என்றும் அவர் கூறினார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web