சர்ச்சில் ஜெபம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு... 15 பேர் பலியான சோகம்!

 
சர்ச்


ஆப்பிரிக்காவில் புர்கினா பாஸோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் ஜெபம் செய்து கொண்டிருந்தவர்களின் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புர்கினா பாஸோவின் வடக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் கடந்த 18 மாதங்களில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.


இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், எசக்கானே கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள், வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 12 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேரை அக்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சர்ச்

அவர்களிலும் 3 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.இது தொடர்பாக தற்போது ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. புர்கினா பாஸோ மட்டுமின்றி அருகிலுள்ள நாடுகளான மாலி மற்றும் நைஜர் நாடுகளிலும் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் உள்ளூர் கிளர்ச்சியாளர் குழுக்கள் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!