செம மாஸ்... இந்தியாவிலேயே முதன் முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை பரிசோதனை வெற்றி!

 
ஏவுகணை

இந்தியாவிலேயே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் முதன்முறையாக ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. 2000  கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 இந்தியன் ரயில்வே நெட்வொர்க்குடன் ஒருங்கிணைந்து, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலில் இருந்து அக்னி ஏவுகணை ஏவப்பட்டது. அடுத்த தலைமுறையை சேர்ந்த இந்த ஏவுகணையில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.  ஒரு சில நாடுகளே கொண்டிருக்கும் இந்த தனித்தன்மை வாய்ந்த திறன்களை இந்தியாவும் பெற்றுள்ளது.

இந்த பரிசோதனைக்காக (டி.ஆர்.டி.ஓ.வுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். ஒடிசாவின் சண்டிப்பூர் நகரில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் அக்னி ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. அது வெற்றியடைந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?