முதல் படுகர் இன பெண்விமானி!! குவியும் வாழ்த்துக்கள்!!

 
ஜெயஸ்ரீ

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் மலையும், மலைசார்ந்த இடங்கள் தான். இங்கு அதிக அளவில் படுகர் இன மலை வாழ் மக்கள் தான் இன்னும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெருவாரியானவர்கள் தேயிலை மற்றும் மலைகாய்கறி விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். இந்நிலையில் கோத்தகிரி  குருக்கத்தியில் வசித்து வருபவர்  மணி.  இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர்.  அவரது மனைவி மீரா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன்.  அதில் மகள் ஜெயஸ்ரீ தற்போது படுகர் இனத்தில் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஜெயஸ்ரீ
கோத்தகிரி  தனியார் பள்ளியில் படித்து  பொறியியல் படிப்புகளை படித்து முடித்தார்.  ஐடி துறையில் பணிபுரிந்த  ஜெயஸ்ரீ, சிறுவயதில் தனது தாய் ஆசைப்பட்டது போல் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றியுள்ளார்.  கொரோனா காலத்தில் ஐடி பணியை விட்டு விட்டு விமான பைலட் படிப்பை ஆன்லைனில் தேடி படித்தார்.  முதலில் இந்திய அளவிலான பைலட் தேர்வில் வெற்றி பெற்று  தென்  ஆப்ரிக்காவில் தனது பைலட் பயிற்சியினை முடித்த ஜெயஸ்ரீ தற்பொழுது பைலட்டாகி உள்ளார்.பைலட்டாக வேண்டும் என்ற மிகப்பெரிய கனவால் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே அதற்கான படிப்பை தொடர்ந்து படித்து வந்தேன்.

ஜெயஸ்ரீ

அதன் பிறகு பைலட் பயிற்சிக்கு விண்ணப்பித்து சேர்ந்தேன். தொடக்கத்தில் எல்லாமே மிரட்சியாகவும்,கற்றுக்கொள்ள கடினமாகவும்  இருந்தது.  அப்போது உடன் இருந்தவர்கள் ஊக்கம் அளித்து தன்னை உற்சாகபடுத்தினர்.  இதன் மூலம் ஜெயஸ்ரீ தங்கள் படுகர் சமுதாயத்திற்கே பெருமை சேர்த்து உள்ளதாக தெரிவிக்கிறார்.நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களாக திகழும் படுகர் இன மக்களில் பெண்கள் ராணுவம், கப்பல்படை  உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்  முதல் பெண் பைலட்டாக ஜெய் ஸ்ரீ தேர்வாகி உள்ளார். இதனையடுத்து ஜெயஸ்ரீக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web