மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ8000/- அரசாணை வெளியீடு!!

 
மீன்பிடித்தடைக் காலம்

தமிழக முதல்வர் ஸ்டாலின்  ராமநாதபுரம் மாவட்டத்தில்  .  மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில்   கலந்து கொண்டு உரையாற்றினார். அதில்  மு.க.ஸ்டாலின், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் . கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக வரலாறு தெரியாமல் பலர் உளறி வருகின்றனர்.  கலைஞர் கருணாநிதியின் எதிர்ப்பை மீறிதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.  

படகு ஸ்டாலின்


கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க, போடப்பட்டது ஒப்பந்தம் மட்டுமே, சட்டம் இல்லையென்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மீனவர்களுக்கான அறிவிப்பையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, மீனவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,035 மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும். மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும். 45,000  மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பணம்

மேலும் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும் என தெரிவித்தவர், விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 18,000ல் இருந்து 19,000 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும் எனவும், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் 4,000ல் இருந்து 4,400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரத்தில் இருந்து  ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில்  22.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web