33 வயதில் பிட்னஸ் பிரபலம் காலமானார்..!! அதிர்ச்சி!!

 
fitness

சமீபகாலமாக இளம் வயதில் மாரடைப்புக்கள், மரணங்கள் அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடிய போதே மரணம், மணமேடையில் மரணம், உடற்பயிற்சி செய்யும் போதே மரணம் என திடீர் மரணங்கள் தொடர்கதையாகி மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் , ஷேர்ஸ் வாங்குவதற்காக பிட்னெஸ், உடற்பயிற்சி செய்து அதை புகைப்படங்கள், வீடியோக்களாக பதிவிடுகின்றனர். இவர்களின்  வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள். பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உடனடியாக உயர்ந்து விடுகிறது.

 ஆன்மிகம், மருத்துவம், அழகு குறிப்பு, பிட்னஸ் என எல்லா துறைகளிலும் இதுபோன்று வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.  அந்த வகையில் பிட்னஸ், பேஷன், டிராவல் குறித்த தகவலை வெளியிட்டு பெண் இன்புளூயன்சராக திகழ்ந்தவர் பிரேசில் நாட்டின் லரிசா போர்கேஸ். இவருக்கு லட்சக்கணக்கான பாலோயர்ஸ்  உள்ளனர்.  இவருக்கு ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது 2 வது முறையாக மாரடைப்பு  ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 33 வயதில் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அவரது குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர்.

fitness

அந்தப் பதிவில்  "33 வயது நிரம்பிய, மிகவும் அன்பான ஒருவரை இழந்த வலி மிகுந்தது. எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன. அவர் இல்லாத எங்களின் ஏக்கம் விவரிக்க முடியாதது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.  ஆகஸ்ட் 20ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அதே நிலையில் மீண்டும்   2வது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  முதல் மாரடைப்பு ஏற்பட்டபோது மது அருந்தி இருந்ததாக தெரிவித்துள்ளனர்.  அவரது மறைவிற்கு அவரது பாலோயர்ஸ்கள், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் இரங்கல் பதிவினை வெளியிட்டு வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web