8 விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி.... !!

 
விமானம் விமான நிலையம்

தமிழகத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது.

விமானங்கள்

இதனால்  சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  சில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில்  பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து சேலம், ஆந்திரா, அபுதாபி, இலங்கை என  மொத்தம் 8 விமானங்கள் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானங்கள் ரத்து!! கனமழை எதிரொலி!!

இதேபோல் சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் மழை காரணமாக தாமதமாக கிளம்பி செல்கின்றன. இந்த கனமழை மேலும் 4 நாட்களுக்கு தொடரும் என வெதர்மேன் பதிவிட்டுள்ளார். பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கரைக்கு திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளது . இதனால் மேலும் விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web