பகீர்... நீரில் மிதக்கும் ரேஷன் அரிசி...பீதியில் பொதுமக்கள்... !!

 
நீரில் மிதக்கும் அரிசி

தமிழகத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் உணவு தானிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடைக்கோடி தமிழனுக்கும் உணவும் ஊட்டச்சத்தும் அவசியம் என்பதை மக்களுக்கு  வலியுறுத்தும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் உணவு தானிய பொருட்களான அரிசி, கோதுமை  உட்பட பல வகையான பொருட்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.  

நீரில் மிதக்கும் அரிசி


இந்நிலையில், ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசி நீரில் மிதப்பதாக ஒரு தகவல் திடீரென பரவத் தொடங்கியுள்ளது. இது  பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் என மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும்  அத்தகைய பிளாஸ்டிக் அரிசியை வாங்க வேண்டாம் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால்   பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.  இது குறித்து உணவு வழங்கல் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “  பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீரில் மிதக்கும் அரிசி மணிகள் செறிவூட்டப்பட்டவை. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள்

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இரத்த சோகை போன்ற தீவிர பிரச்சனையை எதிர்த்து போராடுகிறது. இந்த அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12  ஊட்டச்சத்துகள் செயற்கையாக ஏற்றப்படும். இந்த வேதிப்பொருள் கலவையும், மாவாக்கப்பட்ட அரிசியும் சேர்க்கப்படும். பிறகு, இந்த மாவு அரிசி வடிவில் மீண்டும் இயந்திரங்களில் வார்த்தெடுக்கப்பட்டு  சாதாரண அரிசியுடன் 100:1 என்ற விகிதத்தில்  கலக்கப்படுகின்றன.இந்த அரிசியின்  நிறம் வேறு மாதிரியாக இருக்கும். நீரில் மிதக்கும். இதில் சேர்க்கப்படும் ஊட்டச்சத்து பொருட்கள் காரணமாக அவை எளிதாக நீரில் மூழ்கிவிடாது. எனவே, செறிவூட்டப்பட்ட அரிசி என அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்” என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web