பிலிப்பைன்ஸை உருக்குலைத்த வெள்ளப் பேரழிவு... 66 பேர் பலி, 26 பேர் மாயம்!

 
வெள்ளம்
 

மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி சூறாவளி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கடும் காற்று மற்றும் மழையால் வீடுகள் இடிந்து விழுந்ததுடன், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செபு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் கூரைகளில் சிக்கிய மக்கள் மீட்பு குழுவிடம் உதவி கோரி போராடியுள்ளனர்.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்றபோது, அகுசன் டெல் சுர் மாகாணத்தில் பிலிப்பைன்ஸ் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பலியாகினர். இதேவேளை, மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கல்மேகி, மேற்கு பலவான் மாகாணம் வழியாக தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது. பெரும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

செபு மாகாணம் பேரிடர் நிலை அறிவித்துள்ள நிலையில், அங்கிருந்த பலர் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திலிருந்து மீண்டு வராமல் மீண்டும் பேரழிவை சந்தித்துள்ளனர். கிழக்கு மற்றும் மத்திய பிலிப்பைன்ஸ் மாகாணங்களில் 3.8 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயல் சீற்றத்தால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், 100 துறைமுகங்களில் 3,500 பேர் சிக்கித் தவித்துள்ளனர். மேலும், 186 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வருடத்திற்கு சுமார் 20 சூறாவளிகளால் தாக்கப்படும் பிலிப்பைன்ஸ் மீண்டும் ஒரு கடுமையான பேரிடரை எதிர்கொண்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!