நீர்வரத்து அதிகரிப்பு... கொசஸ்தலை ஆற்றோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
நாளை நள்ளிரவுக்குள் பூண்டி அணைக்கு மேலும் 1000 கனஅடி தண்ணீர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக நீர்நிலைகளில் நீர்வரத்து வேகமாக அதிகரித்து, திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

பூண்டி ஏரி

தொடர்ந்த மழையால், 35 அடியைக் கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் தற்போது 33 அடியை நெருங்கியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு 4,000 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களிலும், உபரி நீர் கால்வாய்களுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மோன்தா புயல் மற்றும் பருவமழை தாக்கம் தொடர்வதால், மழை மேலும் தீவிரமாகும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!