குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு... தொடர்ந்து 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

 
குற்றாலம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் தாக்கம் காரணமாக, அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் நான்காவது நாளாகவும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தொடர்ந்து 6வது நாளாக தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

மலைப்பகுதிகளில் அதிகமான நீர் வரத்து காரணமாக, காட்டாற்று வெள்ளம் முன் தினங்களில் செம்மண் நிறத்துடன் கரைபுரண்டு வழிந்தது. தற்போது மழைப்பொழிவு சற்று தணிந்தாலும், நீரின் வேகம் மற்றும் சீற்றம் அதிகமுள்ளதால் அதிகாரிகள் பாதுகாப்பு கருதி தடையைத் தொடர முடிவு செய்துள்ளனர்.

குற்றாலம்

இந்த நிலையில் இன்று முதல் தீபாவளியை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி வரத் தொடங்கி உள்ளனர். காலை முதலே அருவி பகுதிகளுக்கு வந்திருந்த பெரும்பாலானோர் குளிக்கத் தடை நீங்காமல் இருப்பதை அறிந்து ஏமாற்றமடைந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?