செம மாஸ்... சென்னையில் குதூகலம்... பிப்ரவரி 10ம் தேதி செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!

 
செம்மொழி பூங்கா

சென்னை நகரின்  பிரதானப் பகுதியில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா.  அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்கும்  தாவரவியல் பூங்கா கண்களுக்கு விருந்து.  தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை  700 வகையான தாவரங்களை கொண்டு  ரூ.8 கோடி செலவில் செம்மொழிப் பூங்காவை அமைத்துள்ளது.  ஊட்டி தாவரவியல் பூங்காவை மாடலாகக் கொண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் வடிவமைக்கப்பட்டது

மலர்க்கண்காட்சி

இந்த செம்மொழிப் பூங்கா.  இங்கு விதவிதமான அரிய வகை மலர்களான முளரிப்பூ(உரோசா), மல்லிகை, செண்பகம், பாரிஜாதம், பவளமல்லிகை  என  வாசனை மிக்க மலர்கள் அடங்கிய   நறுமணத் தோட்டம் உண்டு. அதே நேரத்தில்  துளசி, வசம்பு, குப்பைமேனி, இன்சுலின் செடி  என  மூலிகைத் தோட்டமும் உண்டு. கூடவே  போன்சாய் முறையில் வளர்க்கப்பட்ட ஆல், அரசு, மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, எலுமிச்சை மரங்கள் கொண்ட போன்சாய் தோட்டமும், கண்களுக்கு விருந்து படைக்கும் மஞ்சள் மலர்களையும், மஞ்சள் செடிகளையும் கொண்ட  மஞ்சள் பூங்காவும் உண்டு.

மலர்க்கண்காட்சி

 விதவிதமான மூங்கில் மரங்கள் நிரம்பிய மூங்கில் பூங்கா, பலவிதமான பட்டாம் பூச்சிகள் ஓடியாடும் பட்டாம்பூச்சிப் பூங்கா என 10 வகையான  சிறுபூங்காக்கள் செம்மொழிப் பூங்காவில் இடம்பெற்றுள்ளன.இங்கு ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டிற்கான மலர்க் கண்காட்சி  பிப்ரவரி   10ம் தேதி  நடைபெற உள்ளதாக செம்மொழி பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மலர் கண்காட்சி சென்னையில் 3வது முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web