2025 இறுதிக்குள் பறக்கும் கார் டெமோ ... எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
உலகம் முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால் பயண தாமதங்கள் அதிகரிக்க, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வாக பறக்கும் கார்களை உருவாக்க பல நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோவாகக் காண்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்த நிகழ்வு வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். மேலும், காரில் இறக்கைகள் இருக்கும் என கேட்கப்பட்டபோது, “வெளியீட்டுக்கு முன் விவரங்களை பகிர முடியாது, ஆனால் இது இதுவரை வெளியிடப்பட்ட சிறந்த தயாரிப்பாக இருக்கும்” என கூறியுள்ளார்.

1950களிலிருந்து பறக்கும் கார் யோசனை பலமுறை முயற்சிக்கப்பட்டாலும், செயல்பாட்டில் சிக்கல்கள் காரணமாக வெற்றியடையவில்லை. பறக்கும் கார் உருவாக்கம் சிக்கலான ஒழுங்குபடுத்தல் மற்றும் பாதுகாப்பு அனுமதிகளை தேவைப்படுத்துகிறது. எனினும், எலான் மஸ்க்கின் இந்த புதிய முயற்சி, வாகனத் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
