செம... மெட்ரோ போல் மாறும் பறக்கும் ரயில்கள்!!

 
ரயில்

 தமிழகத்தின் தலைநகர் சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர சென்னையையும், புறநகர்ப்பகுதிகளையும் இணைக்கும் வகையில் புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை- திருவெற்றியூர், கடற்கரை-வேளச்சேரி என புறநகர் ரயில் சேவை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கிறது.

ரயில்

இந்த ரயில்களில் தினமும்  ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.  அலுவலகம், பள்ளி செல்லும் நேரங்களில்   ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதும்.சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை  ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி, பெருங்குடி, திருவான்மியூர், கஸ்தூரிபாய்  பகுதிகளை இணைக்கிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்கள்  மெரினா கடற்கரை,   திருவல்லிக்கேணி ரயில் நிலையம், சேப்பாக்கம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் வழியாக இந்த ரயில் செல்கிறது. இந்த நிலையில், சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த  மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மெட்ரோ பறக்கும் ரயில்


இது குறித்து  வணிக திட்ட அறிக்கை தயார் செய்யவும் திட்டமிட்டுள்ளது. பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையம்போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டு வருகிறது.  மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்கள் இதில் அடங்கும். ரயில் நிலையங்களில் 1 முதல் 4 தளங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக அமைந்துள்ளன.  மொத்தமாக  20,44,400 ச.மீ. அளவில் இந்த இடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கான   வணிக திட்ட அறிக்கை தயார் செய்வது குறித்த  நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web