முடிவுக்கு வந்தது தாக்குதல்.. திறக்கப்பட்ட இரு நாட்டு எல்லை.. நிம்மதியடைந்த மக்கள்..!

 
பாகிஸ்தான் - ஈரான்

பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தணிந்ததை அடுத்து, அனைத்து எல்லைகளும் திறக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியது. அங்கிருந்து, தங்கள் நாட்டில் செயல்படும் ஜெய்ஷ் அல்-அடல் என்ற பலூச் பிரிவினைவாத அமைப்பின் இரு நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது பாகிஸ்தானும் வியாழக்கிழமை துல்லிய தாக்குதல்களை நடத்தியது.

Why Did Iran Launch Attack On Sunni Militant Bases In Pakistan?

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஐநாவும் இந்த பிரச்சனையில் தலையிட்டு அமைதிக்காக குரல் கொடுத்தது. அதனால் இரு நாடுகளும் சமாதானம் அடைந்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளும் திறக்கப்பட்டன.

Which are the armed groups Iran and Pakistan have bombed — and why? |  Military News | Al Jazeera

இதைத் தொடர்ந்து காய்கறிகள் மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் சென்ற 100க்கும் மேற்பட்ட லாரிகள் டஃப்தான் எல்லையைக் கடந்து ஈரானுக்குள் நுழைந்ததாக ஈரானின் மக்ரான் மாகாண ஆணையர் சையத் அகமது உம்ரானி தெரிவித்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருநாட்டு எல்லையில் காத்து கிடக்கும் சரக்கு, எரிபொருள், எரிவாயு லாரிகள், கண்டெய்னர்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவுவதால் எல்லையோர மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web