தைராய்டு இருக்கறவங்க சாப்பிட வேண்டிய உணவுப்பட்டியல்..!!

 
தைராய்டு

மனிதர்களின் கழுத்தின் கீழே காணப்படும் பட்டாம்பூச்சி வடிவ ஒரு சிறிய நாளமில்லா சுரப்பி தைராய்டு. இந்த சுரப்பி  இதயம், மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள், வாஸ்குலர் (இரத்த நாளங்கள்) அமைப்புகள், இரத்த அழுத்தம், செரிமானப் பாதை மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்து   வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் என  2  வகையான தைராய்டுகள் உள்ளன.ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகிதமான உணவை எடுத்துக் கொண்டால் போதுமானது.  

தைராய்டு

அவர்களின் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்திக் கொள்ளலாம்.  பதப்படுத்தப்பட்ட உணவுகள், க்ளூடன் நிறைந்த உணவுகள் தவிர்ப்பதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.  இரவு நேரத்தில் நன்றாக தூக்கத்தை வரவழைக்கும் சில தைராய்டு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  செர்ரி பழங்களில் நம் தூக்கத்தை ஒழுங்குப்படுத்தக் கூடிய மெலடோனின், டைப்டோபான், பொட்டாசியம் மற்றும் செரோடோனின் போன்ற நான்கு வெவ்வேறான கலவைகள் உள்ளன. ஓட்ஸில் நமக்கு தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் ஹார்மோனும் வைட்டமின் பி6 ஆகியவையும் உள்ளது. கொண்டைக் கடலையில் நமக்கு நல்ல தூக்கத்தை வரவழைக்க கூடிய கலவையான மெலோடினினை உற்பத்தி செய்யும் வைட்டமின் பி6 நிறைய உள்ளது.

தைராய்டு
பூசணிக்காய் விதையில் மாக்னீசியமும் ட்ரைப்டோபானும் உள்ளது. உங்களின் கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்கும் வல்லமை உள்ளது.பெண்களின் கர்ப்ப காலத்தில் அஸ்வகந்தாவை சாப்பிடுவது அவ்வுளவு பாதுகாப்பானது அல்ல. ஆனால் தாய்மார்கள் பாலூட்டும் காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. இதை சாப்பிடுவதால் நம் மன அழுத்தம் குறைகிறது. நம்முடைய ஹார்மோன் அளவை சீராக வைத்திருக்கிறது. மேலும் நம் கார்டிசாலின் அளவையும் குறைக்கிறது.
இன்சோம்னியாவை குணப்படுத்தும் பாரம்பரியமான மூலிகை இதுவாகும். இதிலிருக்கும் அபிஜெனின் என்ற ஃபிளாவனாய்ட் கலவைகள் நமக்கு தூக்கத்தை வரவழைக்கிறது.
ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள்  சத்து நிறைந்த சரிவிகித உணவை சாப்பிடுவதால்   தைராய்டு சுரப்பியின் செயல்பாடு மேம்படுகிறது. இதனால்  வைட்டமின் குறைபாடுகளை நீக்குகிறது. தைராய்டால் ஏற்படும் அறிகுறிகளும் படிப்படியாக குறையத் தொடங்கும்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web