செம... 105 ஆண்டுகளில் முதன் முறையாக ரயில்வே வாரிய தலைவராக பெண் நியமனம்!!

105 ஆண்டு கால ரயில்வே வரலாற்றில் ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக முதன் முறையாக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜெயா வர்மா சின்ஹா. தற்போதைய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31 உடன் முடிவடைந்த நிலையில் ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வர்த்தக மேம்பாட்டு உறுப்பினராக இருக்கும் ஜெயா வர்மா சின்ஹாவை புதிய தலைவர் மற்றும்தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
ஜெயா வர்மா சின்ஹா அக்டோபர் 1ம் தேதி, பணி ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஓராண்டு காலம் இப்பதவியை வகிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெயா வர்மா சின்ஹா அலகாபாத் பல்கலைக்கழக மாணவியாக இருந்து இந்திய ரயில்வே துறையில் 1988ல் பணியில் சேர்ந்தார்.
வடக்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே என 3 மண்டலங்களிலும் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சமீபத்திய கோர ரயில் விபத்து சமயத்தில் சிக்கலான சிக்னல் அமைப்பு முறையை செய்தியாளர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தவர். இது தவிர ஜெயா வர்மா சின்ஹா வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ரயில்வே ஆலோசகராக 4 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இவரது பணிக்காலத்தில் கொல்கத்தா – டாக்கா இடையிலான மைத்ரிஎக்ஸ்பிரஸ் சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!