பனை மரம் வெட்டியவர் மீது பாய்ந்தது FIR .. தீவிர விசாரணையில் காவல்துறை..!

 
பூமிநாதன்

தமிழகத்தில் முதன்முறையாக பனை மரங்களை வெட்டியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு (FIR FIR )செய்யப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கீழ சேத்தி பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் வரமதியின் கணவர் பூமிநாதன், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட நிலத்தில் மயான பராமரிப்புக்காக பனை மரங்களை வெட்டினார்.



இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் நேரில் சென்று விசாரணை நடத்தி அதன் பிறகு பார்த்திபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடையூர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் பனை மரங்களை வெட்டிய குற்றத்திற்காக 427வது பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா கூறியதாவது: வருவாய் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், திருவாரூர் மாவட்டம், குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதனிடம், உடையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபையில் தனித்தனியாக அறிவித்தும் பனைமரம் வெட்டும் அவலம் தொடர்வதால், தமிழக அரசு அறிவிப்பாணையை அமல்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழர்களின் கலாச்சார அடையாளமாக விளங்கும் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என விவசாய நிதிநிலை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web