இங்கிலாந்து திருச்சபை வரலாற்றில் முதல் முறையாக பேராயராக பெண் நியமனம்!

 
இங்கிலாந்து திருச்சபை சாராம் இங்கிலாந்து திருச்சபை சாராம்

இங்கிலாந்து திருச்சபையின் 1400 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக 63 வயதான சாராம் முல்லாலி என்ற பெண் பேராயராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2018 ஆம் ஆண்டு முதல் லண்டன் ஆயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பரில் பேராயர் ஜஸ்டின் வெல்பி ராஜினாமா செய்த காலியிடத்தில் சாராம் முல்லாலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்வு ஜனவரியில் நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்கு முன்பு சபையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமே பெண்ணான முல்லாலி, பேராயர் பதவிக்கு வர வழிவகுத்தது.

இவர் பேராயராக இருந்தபோது, ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார். இதனால், சுமார் எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?