நெகிழ்ச்சி... ”நம்ம ஊருக்கு வந்தவங்க பட்டினி கிடந்தால் நல்லா இருக்காது”.. ஜல்லிக்கட்டு திடலில் இலவசமா டீ, காபி, டிபன்... !

 
அலங்காநல்லூர் குடும்பம்

அலங்காநல்லூரில் நீண்ட நாட்களாக காத்திருக்கும் கால்நடை உரிமையாளர்களுக்கு கடந்த 21 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் உணவு, டீ, காபி, தின்பண்டங்கள் வழங்கி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்கின்றன, இதில் பங்கேற்க காளை உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

jallikattu

அப்படி நிற்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு முறையான உணவு, தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. வாடிவாசல் அருகே வசிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவி மீனாம்பாளின் குடும்பத்தினர் கடந்த 21 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் கால்நடை உரிமையாளர்களுக்கு உணவு, டீ, காபி, சுண்டல், தின்பண்டங்கள் வழங்கி வருகின்றனர்.

உணவளித்து மகிழ்விக்கும் அவர்களின் செயல் காளை உரிமையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மாணவி மீனாம்பாள் பேசுகையில்... “எங்கள் வீட்டின் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக மாட்டின் உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் சோறு தண்ணீர் இல்லாமல் பசியுடன் காத்திருக்கின்றனர். நம்ம ஊருக்கு வருபவர்கள் பட்டினி கிடந்தால் நன்றாக இருக்காது.

alanganallur jallikattu

அதனாலதான் பாட்டி காலத்துல இருந்து இது வரைக்கும் சாப்பாடு, டீ, காபி போட்டுக்கிட்டு இருக்கோம். பசு மாட்டின் உரிமையாளர்களின் சிரிப்பு நமக்குப் போதும். அதுவே மனநிறைவைத் தருகிறது,'' என்றார். இவர்களின் பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web