பள்ளி மாணவிக்கு கட்டாய முத்தம்.. எல்லை மீறிய பஸ் கண்டக்டர் கைது!

கேரள மாநிலம் திருச்சூர் பெரும்பில்லிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சஜன் (வயது 37). இவர் தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் திருச்சூர்-கொடுங்கல்லூர் வழித்தடத்தில் பஸ் கண்டக்டராக உள்ளார். நேற்று காலை வழக்கம் போல் சஜன் வேலைக்கு சென்றார். அப்போது அவரது பேருந்தில் இரிஞ்சாலக்குடா பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு பள்ளி மாணவி ஏறினாள். கண்டக்டர் சஜன் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் மாணவிக்கு 'கட்டாய முத்தமும்' கொடுத்துள்ளார்.
பஸ் கண்டக்டர் திடீரென சக பயணிகள் மத்தியில் ‘கட்டாய முத்தம்’ கொடுத்ததால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். பள்ளிக்கு சென்றதும், பேருந்தில் நடந்த சம்பவத்தை ஆசிரியர்களிடம் மாணவி கூறியுள்ளார். அதன்பின், ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் சகோதரர் தனது நண்பர்கள் சிலருடன் மாலையில் பேருந்து நிலையத்துக்குச் சென்றார். மாணவி சென்ற தனியார் பேருந்தை தடுத்து நிறுத்தினர்.
மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட கண்டக்டர் சஜனை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். பள்ளி மாணவியிடன் அத்துமீறியது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தி கண்டக்டர் சஜனை கைது செய்தனர். ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு நடத்துனர் "கட்டாய முத்தம்" கொடுத்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா