திருவண்ணாமலை கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்... பக்தர்கள் பாராட்டு!

 
திருவண்ணாமலை
 


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வெளிநாட்டு பக்தர்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டது பக்தர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இறுதிநாளில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

இதற்காக சென்னையைச் சேர்ந்த நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் 150 பேர் கொண்ட குழுவுடன் கோவிலின் உள், வெளி பிரகாரங்கள், தூண்கள், சிற்பங்கள், இரும்பு கதவுகள், நந்தவனம் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

அவர்களுடன் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்களும் இணைந்து உழவாரப்பணியில் பங்கேற்றனர். அவர்கள் முழுமையான பக்தியுடன் கோவிலின் ஒவ்வொரு மூலையையும் சுத்தம் செய்தனர்.

இந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்ததை கண்ட பக்தர்கள் பாராட்டுகளையும் கைதட்டல்களையும் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!