3 வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ... விவசாய நிலங்கள் அழிந்து நாசம்!

 
காட்டுத்தீ

 தமிழகத்தில் தேனி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் அழகான வனப்பகுதிகளை கொண்டது.  குளுகுளு சீதோஷ்ண நிலையில்  மலைகள் சூழ்ந்து பசுமையாக மனதுக்கு இதமான ரம்மியமான சூழல்  நிலவி வருகிறது. தமிழக, கேரள மாநில எல்லையாகவும்,  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  இயற்கையின்   சொர்க்கபுரியாகவும் திகழ்கிறது.   கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் இணைந்து இங்கு  சிலிர்க்க வைக்கும் .  இங்கு பெரும்பாலான பகுதிகளில் மழைக்காலங்களில் பெரியகுளம் பகுதியில் அடுக்கம்-கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் போடிமெட்டு மலைச்சாலைகளில்  திடீர் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும்.

காட்டுத்தீ

கோடைக்காலங்களில் பெரியகுளம், மூணாறு, போடி குரங்கணி   மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதும் தொடர்கதையாகி வருகிறது.   அந்த வகையில் பிப்ரவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை திடீரென   காட்டுத்தீ எரிய தொடங்கி தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்த காட்டுத் தீ யானது 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கொழுந்து விட்டு எரிகிறது. இதனால்  வனப்பகுதியில் இருந்த மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்து வருகிறது. அத்துடன்   வன உயிரினங்கள் தீயில் கருகி பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை உடனடியாக அணைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

காட்டுத்தீ

வெயில் காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவிவிடும் அபாயமும் உண்டு. இந்த காட்டுத்தீயானது நாட்கணக்கில் இரவு பகலாக பற்றி எரியும். இதனால்  அடிவாரப் பகுதிகளில். விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயமும்  நிலவி வருகிறது.   காட்டுத்தீயை அணைக்க தேவையான உபகரணங்களை வனத்துறையினருக்கு வழங்க  வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web