மாணவர்களுக்கு முன் தேம்பி தேம்பி அழுத அதிமுக மாஜி அமைச்சர்.. வீடியோ வைரல்..!

 
 கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூரில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


அப்போது மறைந்த நண்பர் காளிராஜன் திருவுருவச் சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் காளிராஜனும் நெருங்கிய நண்பர்கள்.இதனிடையே, மேடையில் பேசிய கடம்பூர் ராஜூ, மறைந்த தனது நண்பர் காளிராஜனையும், இருவரின் நட்பையும் நினைவு கூர்ந்து அன்புடன் பேசினார்.

ஆரம்பத்திலிருந்தே கண்ணில் கண்ணீர் தேங்கிய படி பேசி மேடையிலேயே தன் நண்பனை நினைத்து அழுதார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். இருப்பினும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது நண்பரை பற்றி பேசி முடிக்கும் வரை கண்ணீருடன் பேசினார். அவரது நண்பரைப் பற்றி அன்பாகப் பேச கூட்டத்தினர் நெகிழ்ந்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

 

From around the web