முன்னாள் முதல்வர் திடீர் ராஜினாமா... தெலுங்கானா அரசியலில் பரபரப்பு!

 
தெலுங்கானா ராஜையா

தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ராஜையா கட்சியில் இருந்து விலகி திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lu

தெலுங்கானா மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர்களுள் ஒருவராக அறியப்பட்டவர், தட்டிகொண்ட ராஜையா. 2014ம் ஆண்டு அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று, துணை முதல்வராகப் பதவி வகித்தவர். ஆனால், இவர் 2015ம் ஆண்டு சுகாதாரத்துறை செயல்பாட்டில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனாலும், தொடர்ந்து, அவர் கட்சியில் ஓரம் கட்டப்பட்டு, 2023ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

லு

இதன் காரணமாக அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் வரவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கட்சி தலைமையிடம் இருந்து எந்த அழைப்பும் அவருக்கு வரவில்லை. இதனால், முழுமையாக விரக்தியடைந்த பிஆர்எஸ் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, சட்டமன்ற தேர்தலில் தோற்றுள்ள பிஆர்எஸ் கட்சிக்கு, மக்களவைத் தேர்தலில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிஆர்எஸ் கட்சிக்கு வருவதற்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்த ராஜையா, விரைவில் தாய்க் கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web