இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டிரோன் பைலட் உரிமம் !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகக் கோப்பை ஜெயித்த தலைவர் என்ற பெருமை பெற்ற எம்.எஸ். தோனி, இப்போது ஒரு அங்கீகரிக்கப்பட்ட டிரோன் பைலட் ஆக மாறியுள்ளார்.
தோனி, தனது டிரோன் பைலட் உரிமம் பெற்றதைக் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். தோனி, சென்னையில் அமைந்துள்ள "கருடா ஏரோஸ்பேஸ்" நிறுவனத்தில் தனது டிரோன் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்நிறுவனம், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனம் ஆகும்.

தோனி இந்நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி டிரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றான கருடா ஏரோஸ்பேஸ், இதுவரை 2,500+ பயிற்சியாளர்களுக்கு டிரோன் பயிற்சி வழங்கியுள்ளது.

அனுபவமுள்ள பயிற்றுநர்களின் மேற்பார்வையில், தரமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தோனியின் இந்த புதிய பயணமானது, இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேளாண்மை, பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட துறைகளில் டிரோன் பயன்பாடு விரிவடைய உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
