பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மனைவி திடீர் மரணம்.. முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்!
1983ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர் கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் இன்று திடீரென காலமானார். இந்தத் தகவலை முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான கீர்த்தி ஆசாத் X (டுவிட்டர்) என்ற சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
"என் மனைவி பூனம் இப்போது இல்லை. பூனம் இன்று மதியம் 12.40 மணியளவில் காலமானார். உங்கள் இரங்கலுக்கு அனைவருக்கும் நன்றி" என்று கீர்த்தி ஆசாத் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் எழுதினார். கிரிக்கெட்டுக்குப் பிறகு அரசியலில் தீவிரமாக இருக்கும் கீர்த்தி ஆசாத் தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள பரத்வான்-துர்காபூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
கீர்த்தி ஆசாத்தின் மனைவி மறைவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். கீர்த்தி ஆசாத் இந்தியாவுக்காக 7 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 135 ரன்கள் மற்றும் 269 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் முறையே 3 மற்றும் 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!