அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார் தீவைத்து எரிப்பு!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
பொன்னம்பலம்

தமிழகத்தில் அதிமுக   ஆட்சிக்காலத்தில் சமயநல்லூர் தொகுதியின் அதிமுக  சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பொன்னம்பலம். இவரது வீடு  மதுரை மாவட்டம் சத்திரபட்டி  கருவனூர் கிராமத்தில் அமைந்துள்ளது.  இவரது வீட்டை ஒட்டியே உறவினர்களின் வீடுகளும் அமைந்துள்ளன. இவர்களின் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை  நள்ளிரவில்   மர்ம நபர்கள்  சிலர் தீ வைத்து எரித்துச் சென்றனர்.

கார் எரிப்பு


இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த  எம்எல்ஏவின் உறவினர்கள்  உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன் இது குறித்து தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் வந்து சேர்வதற்குள்   கார்கள்   எரிந்து நாசமாகின.  கார் எரிப்பு சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு   வருகின்றனர். 

கார் எரிப்பு


மதுரையில்  ஜுன் 25ம் தேதி கருவனூரில் உள்ள  கோயிலில் முதல் மரியாதை அளிக்கும் விஷயத்தில்   முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் இருவருக்கும் மோதல்  ஏற்பட்டது. அன்றைய தினமே   இரவு பொன்னம்பலத்தின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் உறவினர்களது கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web