அதிர்ச்சி.. முன்னாள் எம்.பி திடீர் மரணம்.. அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகம்..!

 
பரசுராமன்

தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ரஹ்மான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். 1985ல் அரசியலில் இறங்கி அதிமுகவில் இணைந்தார். அதன்பின், 2001ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை நீலகிரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து, அ.தி.மு.க.,வில் தஞ்சை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

பரசுராமன்

2014 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.பாலுவை எதிர்த்துப் போட்டியிட்டு தஞ்சாவூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் போட்டியிலேயே மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர். 2014 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தின் இணைச் செயலாளராக இருந்த இவர், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வைத்திலிங்கத்துடன் ஏற்பட்ட கருத்து மோதலால் 2021ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

கழகத்தின் கொள்கை- நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டதால், கழக்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், கழக்கத்தின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், சங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதன் காரணமாக அப்போது அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பரசுராமனை நீக்கப்படுவதாக அறிவித்தார்..

தஞ்சாவூர் தொகுதி முன்னாள் எம்.பி பரசுராமன் உயிரிழப்பு

அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின், தன் ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் சேர்ந்தார். அங்கும் அவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கட்சியில் ஓரங்கட்டப்பட்ட பரசுராமன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வந்த கே.பரசுராமன் உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பரசுராமனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web