ஆர்பிஐ முன்னாள் கவர்னர் காலமானார்... தலைவர்கள் இரங்கல்!!

 
வெங்கட்ரமணன்

இந்திய ரிசர்வ் வங்கியின்  முன்னாள் கவர்னர் எஸ் வெங்கட்ரமணன்.   1992 முதல் 1999 வரை 18வது கவர்னராக இருந்தவர்.   1985  முதல் 1989 வரை மத்திய நிதித்துறை செயலாளராக இருந்தவர்.இன்று காலை சென்னையில் காலமானார்.  இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் கிரிஜா வைத்தியநாதன்   தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்தவர். வெங்கிடரமணன்  திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த நாகர்கோவிலில் பிறந்தவர்.   கர்நாடகா அரசின் ஆலோசகராகவும் பணிபுரிந்த போதும், கவர்னராக இருந்த போதும்  இவர் திறமையானவர் என ஆர்பிஐ இவரை அங்கீகரித்து இருந்தது. 

ஆர்பிஐ ரிசர்வ்
இவரது திறமையான அணுகுமுறை, பணம் செலுத்துவதில் ஏற்பட்ட நெருக்கடி இவைகளில் இருந்து  நாட்டை வழி நடத்தி சென்றதில்  இவரது ஆளுமை சிறந்ததாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக வெங்கிடரமணன் இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்படுத்தல் திட்டத்தை முன்னெடுத்தது.  இந்த காலகட்டத்தில் ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன.  

கிரிஜா வைத்தியநாதன்


ஓய்வுக்குப் பிறகும், அசோக் லேலண்ட் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் லிமிடெட், நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் அசோக் லேலண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் இவைகளின்  தலைவராக வெங்கிடரமணன் பணிபுரிந்தார்.  மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஸ்பிக், பிரமல் ஹெல்த்கேர் லிமிடெட், தமிழ்நாடு வாட்டர் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப். லிமிடெட்   வாரியங்களிலும் பொறுப்புகளில் இருந்தார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web