அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார் !

 
டிக் செனி
 

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் டிக் செனி (Dick Cheney) திங்கட்கிழமை இரவு நிமோனியா மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினையால் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். 83 வயதான டிக் செனி, இதற்கு முன்பு ஐந்து முறை மாரடைப்பு ஏற்பட்டபோதும் சிகிச்சை பெற்று மீண்டிருந்தார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிக் செனி, 1989 முதல் 1993 வரை அதிபர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் ஆட்சியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றினார். அக்காலத்தில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், ஜார்ஜ் புஷ் மகன் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக இருந்தபோது, 2001 முதல் 2009 வரை துணை அதிபராக இருந்தார். அந்த காலத்தில் அவர் தலைமை நிர்வாக அதிகாரி போன்று செயல்பட்டு பல முக்கிய முடிவுகளை எடுத்தார். குறிப்பாக, 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளில் முக்கிய பங்கு வகித்தார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்தவர் டிக் செனி. "அமெரிக்க குடியரசுக்கு டிரம்ப் போல் பெரிய அச்சுறுத்தல் எவரும் இல்லை" என்று அவர் முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸுக்கு வாக்களித்ததாகவும் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார். டிக் செனியின் மறைவுக்கு அமெரிக்கா முழுவதும் அரசியல் தலைவர்கள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!