மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா காலமானார்... தொண்டர்கள் அதிர்ச்சி!
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டாச்சாரியாவுக்கு வயது 80. மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த இடது முன்னணி ஆரசு காலத்தில் பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி CPM முதல்வராக பதவி வகித்தவர்.

அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, கொல்கத்தாவில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
