உலகக்கோப்பையை வென்ற முன்னாள் வீரர் கார் விபத்தில் பலி.. சோகத்தில் ரசிகர்கள்...!!

 
hannus trydom

1965ல் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம். இவர், 1993 ல்  சர்வதேச அளவில் ரக்பி விளையாடி வந்தார். இதையடுத்து 1995 ஆம் ஆண்டு ஸ்பிரிங்போக் அணியில் இடம் பெற்று இருந்தார்.  அப்போது நடைபெற்ற  ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பிரிங்போக் அணியில் இடம் பெற்று விளையாடினார்.


மேலும், சொந்த மண்ணில் நடந்த ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பிரிங்போக் அணி முதல் முறையாக உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார்.  
இந்நிலையில், ஹன்னஸ் கார் விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

hannus trydom

 அவருக்கு வயது 58. இது குறித்து அவரது மனைவி நிகோலி  செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில்  பிரிட்டோரியாவிலிருந்து எமலாஹ்லேனி பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது சமயத்தில் டாக்ஸி மீது விபத்து ஏற்பட்டது எனவும்  அந்த விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web