சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் ஆக.31ம் தேதி தொடக்கம்... தமிழக அரசு ரூ.42 கோடி ஒதுக்கீடு!

 
ஃபார்முலா 4 கார் பந்தயம்

சென்னையில், ஃபார்முலா 4 கார் ரேஸ் ஆகஸ்ட் 31ம் தேதி துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னையில் கார் பந்தயம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே சென்னை சாலைகளில் கார் பந்தயத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட பார்முலா 4 கார் பந்தயங்கள் மீண்டும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா 4 பந்தயம், சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள 3.5 கிமீ சுற்றுவட்டத்தில் இரவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயம் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக தீவை அடைந்து மீண்டும் தீவுத்திடலுக்கு செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் இரவு சாலை கார் பந்தயம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். எனவே, இந்தப் போட்டியை நடத்த தமிழக அரசு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்தது.

போட்டிக்கான பார்வைக் கட்டணத்தைப் பொறுத்தவரை, “பிரீமியம் ஸ்டாண்ட் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் ரூ.3,999, இறுதி நாட்கள் டிக்கெட் கட்டணம் ரூ.6,999, கிராண்ட் ஸ்டாண்ட் 1 முதல் 5 டிக்கெட் கட்டணம் ரூ.1,999, கிராண்ட் ஸ்டாண்ட் வார இறுதி டிக்கெட் கட்டணம் ரூ.2,499, கோல்ட் லவுஞ்ச் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 7,999, கோல்ட் லவுஞ்ச் டிக்கெட் கட்டணம் வார இறுதி நாட்களில் ரூ.13,999, பிளாட்டினம் லவுஞ்ச் டிக்கெட் கட்டணம் ரூ.12,999 மற்றும் வார இறுதி நாட்களில் ரூ.19,999” என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!