தமிழகத்தில் மீண்டும் ஃபார்முலா 4 பந்தயம்!
தமிழகத்தில் சமீபத்தில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டிகள் முதல் சுற்று போட்டிகள் சென்னை இருங்காட்டு கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெற்றது. 2வது சுற்று போட்டிகள் சென்னை தீவுத்திடலில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் Street ரேசாக நடத்தப்பட்டன.

தீவுத்திடலில் நடைபெற்ற இந்த 2 வது சுற்று போட்டிகளை தமிழ்நாடு அரசு, SDAT மற்றும் RPPL நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ளன. தொடர்ந்து 3வது சுற்று போட்டிகள் கோவையில் நடைபெறும் எனவும், 4 மற்றும் 5வது சுற்று போட்டிகள் கோவா மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது RPPL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் நடைபெறவிருந்த 3வது சுற்று போட்டிகள் சென்னை இருங்காட்டுகோட்டை மெட்ராஸ் சர்வதேச கார்பந்தய ஓடுதளத்தில் செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவா அல்லது கொல்கத்தாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த 4வது சுற்று போட்டி கோவை கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் அக்டோபர் 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் . பந்தயம் நடைபெறும் இடத்தை RPPL விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
