ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர் மரணங்கள்... அமெரிக்காவில் தொடரும் சோகம்...!

 
அமெரிக்க மாணவர்

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு சமீபமாக அதிகரித்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது. புத்தாண்டுக்கு பிறகு தற்போது 4 வது இந்திய மாணவர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அமெரிக்கா ஒஹியோ மாகாணத்தில்  படித்து வந்த இந்திய மாணவரின்  உடல்  நேற்று   கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,பிரேத  பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிவிற்கு பின்னர் தான் அவர்   எப்படி இறந்தார் எனத் தெரியவரும். ஜனவரி 2024ல் மட்டும் இது 4 வது  சம்பவம்.  

அமெரிக்க மாணவர்கள்

இச்சம்பவம் குறித்து நியூயார்க்கில்உள்ள இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்   ஷ்ரேயாஸ்ரெட்டி பெனிகெரி உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.இந்த திடீர் மரணம் குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வன்முறை  செயல்களால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.  அவரது இறப்பு குறித்த மேற்படி தகவல்கள் அனைத்தும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான  உதவிகளை செய்ய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது" என  தெரிவித்துள்ளது.

அமெரிக்கா போலீஸ்


கடந்த வார தொடக்கத்தில்  பர்டூ பல்கலைகலைக்கழத்தில் படித்து வந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர் திடீர் மரணம் அடைந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில் திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்திலேயே சடலமாக  கண்டெடுக்கப்பட்டார்.அதே போல் ஜனவரி 16ல்  ஜார்ஜியாவில் உள்ள லிதோனியாவில் அரியானா  விவேக் சைனி மரணம் அடைந்தார். இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் படித்த வந்த அகுல் தவான்   மரணம் அடைந்தார். 18 வயதான அகுல் கடுங்குளிர் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்திருந்தது   குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web