போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி...நாளை முதல் விண்ணப்பிக்கலாம்... தமிழக அரசு அறிவிப்பு!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில்  டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்களை அமைக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இலவச பயிற்சிகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டு தோறும் அரசு வேலைக்காக முயற்சிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து, போட்டி தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி
இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் மூலமாக கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 பேருக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மாணவர்கள், இணையம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும். 6 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்குமிட வசதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in என இணையம் வாயிலாக நாளை ஜனவரி 29ம் தேதி முதல் 12.02.2024 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். வரும் விண்ணப்பங்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்ப்படுவார்கள் என்றும், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web