செம... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை!!

 
ரேஷன்கார்டு

மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏராளமான சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போதும்  மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுவரை ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மக்கள் இலவச ரேஷன் பொருட்களை மட்டுமே பெற்று வந்தனர். தற்போது ஆயுஷ்மான் பரிசு திட்டம்  மூலம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  செப்டம்பர் 17ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 80 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  மேலும் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து சுகாதார வசதிகளையும்  இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

ரேஷன்கார்டு

பிரதமர் மோடி  செப்டம்பர் 23, 2018 ல்  பி.எம். ஜான் அரோகியா யோஜனா மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  ஆகஸ்ட் 1, 2023 ம் தேதி வரை இத்திட்டத்தின் கீழ்   மொத்தம் 24.33 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.  மருத்துவ தேவைகளுக்கு பணமில்லா அணுகலை இத்திட்டம் பெரும் தீர்வாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம்  அரசு மற்றும் அரசு சாராத அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சைகளை பெறலாம்.   முதல் 3 நாள்களைத் தொடர்ந்து, சிகிச்சை பெறும் அடுத்த 15 நாட்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ரேஷன்

 

இந்நாட்களில் தேவைப்படும் மருத்துவ செலவை  குடும்பத்தின் அளவு, வயது, பாலினம் இவைகளை பொறுத்து ஆயுஷ்மான் திட்டம் செலுத்தும்.   அரசு பட்டியலிட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே இந்த இலவச சேவைகள் கிடைக்கும். மருந்துகள், பொருள்கள், கண்டறியும் சேவைகள், மருத்துவரின் கட்டணம், அறை கட்டணங்கள், அறுவை சிகிச்சை கட்டணங்கள், OT, ICU கட்டணங்கள் என  1,929 சேவைகளில் சிகிச்சை தொடர்பான அனைத்து செலவுகளையும் இந்த காப்பீடு திட்டத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 14555 என்ற இலவச எண்ணை அழைத்து பயனடையலாம். இத்திட்டம் குறித்த  பிறதகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://abdm.gov.in என்ற இணையதளத்தை அணுகவும். இதன் மூலம் பயனாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு மறைமுகமாக  எந்த கட்டணத்தையோ, பிரிமீயத் தொகையையோ  செலுத்த வேண்டியதில்லை.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web