இனி தமிழகம் முழுவதும் கர்ப்பிணிகளுக்கு ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை!
இனி தமிழகம் முழுவதும் கர்ப்பிணி தாய்மார்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை மற்றும் தைராய்டு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து வெளியான அறிவிப்பில், "தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தேசிய தகவலியல் மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள தொலைதூர மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆன்லைன் மூலம் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் இணையவழி சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி கர்ப்பிணி தாய்மார்களின் சிறப்பு சிகிச்சைக்காக தஞ்சாவூர் கோட்டம், கும்பகோணம் கோட்டம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு ஒரு மகப்பேறு மருத்துவர் மற்றும் பொது மருத்துவரால் ஒவ்வொரு வாரமும் பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இதில் உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை மற்றும் தைராய்டு போன்ற பல பிரச்சனைகளுக்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் பொது மருத்துவர் ஆகியோர்களால் இணையவழி ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் கோட்டத்தில் 69 கர்ப்பிணி தாய்மார்களும், கும்பகோணம் கோட்டத்தில் 45 கர்ப்பிணி தாய்மார்களும் மற்றும் பட்டுக்கோட்டை கோட்டத்தில் 65 கர்ப்பிணி தாய்மார்களும் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் ஆலோசனை பெறுவதற்கு தொலை தூர மருத்துவமனைகளுக்குச் செல்லத் தேவையில்லை. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும். இச்செயல் தஞ்சாவூர் மாவட்டத்தின் தாய் சேய் நலம் மேலும் மேம்படுத்திட ஒரு முன்னெடுப்பாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
