நாளை முதல் தமிழகம் முழுவதும் 48 கோவில்களில் இலவச நீர்மோர்!

 
நீர்மோர்

தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுவாக சித்திரை மாதம் தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நேரத்தில் தொடர்ந்து ஒரு மாதம் வெயில் கொளுத்தும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் அதிக மழை, அதிக வெயில் என வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் மார்ச் தொடக்கம் முதலே வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. சாலையோரங்களில் வெள்ளரி,  நீர் மோர், கூழ் கடைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.

சேகர்பாபு

மாட்டு வண்டிகளில்  தர்ப்பூசணி விற்பனையும் சூடுபிடித்து வருகிறது. மக்கள் வெயிலின் தாக்கம் தாங்காமல் பகல் முழுவதும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். வெயிலின் அளவு அதிகரித்து இருப்பதால் குழந்தைகள் வயதானவர்கள், இணை நோய் இருப்பவர்கள் முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில் தமிழக முழுவதும்  48 பிரசித்தி பெற்ற கோவில்களில் வெயிலில் தாகத்தை தணிக்க நீர் மோர் வழங்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

நீர்மோர்

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ தற்போது  தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் வெயிலின் தாக்கத்தால்  அவதிப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து விடுபடவும், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவும் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 48 முதல்நிலைக் கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம்  நாளை தொடங்கி வைக்கப்படும் “ எனத்  தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web