அடக் கொடுமையே... ஆபரேஷன் தியேட்டரில் ஃப்ரீ வெட்டிங் போட்டோஷூட்... அதிர வைத்த அரசு மருத்துவர்!
முதலிரவுக்கு தயாராவது முதற்கொண்டு 2கே கிட்ஸ் செய்கிற அலப்பறைகள் அளவேயில்லாமல் போய் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு தயராவது, நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு, தேனிலவு போட்டோஷூட் என புகைப்படங்களாக லட்சங்களை செலவழித்து நினைவுகளை சேகரிப்பதாக சமூக வலைத்தளங்களில் அலப்பறையை கூட்டுகிறார்கள்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் ’ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட்’ நடந்திய அரசு மருத்துவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.
’ப்ரீ-வெட்டிங் சூட்’ டில் முகம் சுளிக்க வைக்கிற அத்துமீறல்களும், ஆடைகளே இல்லாமல் ஏகாந்தமாக திருமண ஜோடி இலை, தழைகளை மறைத்தப்படியே தண்ணீரில் மிதப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகி வைரலான வரிசையில், கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் தனது மனைவியாக மாறவிருக்கும் பெண்ணுடன், ப்ரீ-வெட்டிங் சூட் நடத்திய அரசு மருத்துவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.
Karnataka: Pre-wedding shoot in operation theatre stokes row; Doctor accused of misusing hospital @ShreyaOpines | @Madrassan_Pinky reports | #Karnataka #Doctor pic.twitter.com/KxSs6srwiR
— Mirror Now (@MirrorNow) February 9, 2024
சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் அரசு மருத்துவமனையில், எடுக்கப்பட்ட இந்த ’ப்ரீ-வெட்டிங் ஷூட்’ வீடியோ இணையத்தில் வைரலானது.
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அபிஷேக் என்ற மருத்துவர், நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்கிறார். அவருடன் மருத்துவ உதவியாளரும் அவரது மனைவியாகப் போகும் பெண்ணும் உடனிருக்கிறார். அந்த ஆபரேஷன் தியேட்டரில், கேமரா, லைட்டிங் சகிதம் சிலர் மும்முரமாக படிப்பிடிப்பு நடத்துகின்றனர்.
ஆபரேஷன் தியேட்டரில் கேமராக்களுடன் நுழைந்த அந்நியர்களைக் கண்டதும், அறுவைசிகிச்சைக்கு ஆளாகும் நோயாளி பதற்றத்தில் எழவும் முயற்சிக்கிறார். அவரை அமைதிப்படுத்தி படுக்கச் செய்ததுடன், அறுவை சிகிச்சையை தொடரவும் செய்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களை முகம் சுளிக்கச் செய்தது.
கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பார்வைக்கும் இந்த வீடியோ சென்றது. அதிர்ந்துபோன அவர் உடனடியாக மருத்துவரை பணி நீக்கம் செய்ய உத்தவிட்டார். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர் என்பதால், ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட அந்த மருத்துவர் உடனடியாக பணியை இழந்தார்.
"அரசு மருத்துவமனைகள் மக்களின் தேவைக்காகவே உள்ளன. தனிப்பட்டவர்களின் தேவைக்கு அல்ல. இதில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்றும் அமைச்சர் குண்டுராவ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க