ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!!

 
அம்பிகை

வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி மகாலட்சுமியை வரவேற்க வேண்டும். வீட்டு வாசலில் தாமரை, இதயக்கமலம், ஐஸ்வர்யக் கோலம் இவற்றை இடலாம். ‘திருமகளே வருக’ என்றும் கோலமாவில் எழுதலாம். அதிகாலையில் கதவைத் திறக்கும் பொழுது அஷ்டலட்சுமிகளின் பெயரையும் உச்சரித்து கதவை திறக்க வேண்டும். இல்லத்து பூஜையறையில் மகாலட்சுமி படம் வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி நடுநாயகமாக விநாயகர் படம் வைத்து லட்சுமி கவசம், லட்சுமி துதிகள், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்கர நாமம், சௌந்தர்ய லஹரி இவற்றை பாடுவது சிறப்பு.

இனி வாழ்வில் எப்போதும் ஜெயம் தான்! விஜயதசமியன்று செய்ய வேண்டிய அம்பிகை வழிபாடு!!

அம்பிகைக்கு ‘சக்தி’ என்ற பெயருமுண்டு. எந்தக் காரியத்தை செய்தாலும் ‘சக்தி இருந்தால் செய்.. இல்லையேல் சிவனே என்றிரு’ என்பது ஆன்றோர்கள் வாக்கு. மனிதனின் செயல்பாடுகளுக்கு உடலில் உள்ள சக்தியும்,அருள் கொடுக்கும் சக்தியான அம்பிகையும் தான். அந்த சக்தியை தான், ‘காமாட்சி’ , ‘மீனாட்சி’ ‘விசாலாட்சி’, ‘உண்ணாமலை’ ,‘அகிலாண்டேஸ்வரி’ ‘புவனேஸ்வரி’ , ‘திரிபுரசுந்திரி, காந்திமதி, பெரியநாயகி, தையல்நாயகி’ என பல்வேறு வகையான பெயர்களால் வழிபாடு செய்து வருகிறோம்.

அதிர்ஷ்டம் தரும் ஆடிவெள்ளி அம்பிகை வழிபாடு!

இத்தனை சிறப்புகளைக் கொண்ட அம்பிகையை முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற தினமாக அமைவது  வெள்ளிக்கிழமைகளே. கல்வி, குழந்தைப் பேறு, குடும்பப் பிரச்சினை, திருமண யோகம் , வாழ்வில் செல்வம், மன அமைதி என அனைத்து நன்மைகளும் அடுக்கடுக்காக வந்து சேர ஆடி மாதத்து வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபாடு செய்வோம். அவள் அருளால் கோடி இன்பம் பெறுவோம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web