சிநேகிதனே.. ரகசிய சிநேகிதனே.. கொலையில் முடிந்த முக்கோண கள்ளக்காதல்!

 
தீபிகா

திருச்சி மாவட்டம் புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் விக்ரம் என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் விக்ரம் நின்று கொண்டிருந்த போது, இளம்பெண் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று விக்ரமுடன் தகராறு செய்து கொண்டிருந்தனர். வாய்தகராறு  முற்றி மூவரும் சேர்ந்து விக்ரமை அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல், அவர்களிடம் இருந்து தப்பித்து மாரீஸ் தியேட்டர் நோக்கி ஓடிச் சென்ற விக்ரமை, அந்த கும்பலும் பின்னாலேயே விரட்டிச் சென்று கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்கள்.  கத்தியால் குத்தப்பட்ட விக்ரம் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தீபிகா

இது குறித்து தகவலறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, துணை கமிஷனர் அன்பு ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், "உறையூர் வினாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கணவரை இழந்தவர் தீபிகா. கைக் குழந்தையுடன் தனியாக வசித்து தீபிகா, சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவருக்கும், விக்ரமுக்கும் தகாத கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மேலும் கீழ சிந்தாமணி பாலா (34), சந்துக்கடை கணேசன் (35) ஆகியோருக்கும் தீபிகாவுக்கும் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது.

திருச்சி ரயில் நிலையம் குற்றம் போலீசார்

இந்நிலையில் நேற்று மாலை பாலா, கணேசன் இருவரும் ஒன்று சேர்ந்து தீபிகா விவகாரம் தொடர்பாக விக்ரமை கண்டித்ததாகவும், வாய் தகராறு முற்றியதில் இருவரும் சேர்ந்து விக்ரம் அடித்து, கத்தியால் குத்தி கொலைச் செய்ததும் தெரிய வந்துள்ளது. மூவரையும் கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web