ஒரே பெண்ணைக் காதலித்த நண்பர்கள்... நண்பனைக் கொன்று, காவல் நிலையத்திற்கு தூக்கிச்சென்ற இளைஞர்!

 
ஒரே காதல்

ஒரே பெண்ணை, நண்பர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தனது நண்பனைக் கொலைச் செய்து, காவல் நிலையத்திற்கு தூக்கிச் சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் வேதாந்த் ராஜா. 18 வயதாகும் வேதாந்த், தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

வேதாந்தின் தந்தை நியூசிலாந்தில் தொழிலதிபராக உள்ளார். வேதாந்த் ராஜாவின் நண்பர் ஸ்வப்னில் பிரஜாபதி. 22 வயதான இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இவரது தந்தை ஹஸ்முக் பிரஜாபதி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

காதல்

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள சோலா காவல் நிலையத்திற்கு சென்ற வேதாந்த் ராஜா, வெளியே நிற்கும் காரில் தனது நண்பனின் உடல் இருப்பதாகவும், அவரை பலமுறை கத்தியால் குத்தி கொலைச் செய்து விட்டதாகவும் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக காரில் சென்று பார்த்த போது, அதில் ஸ்வப்னில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டனர். உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், வேதாந்த் ராஜாவைக் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

டெடி காதல் லவ் யூ பொம்மை காதலர் தினம்

போலீசாரின் விசாரணையில், இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக இருவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்துள்ளதும் தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் சனிக்கிழமை ஸ்வப்னிலுக்கு போன் செய்து அழைத்த வேதாந்த் ராஜா, விஸ்வர்கர்மா மேம்பாலம் அருகே அவரை வரவழைத்து கொன்றது தெரியவந்தது. தான் காதலித்த பெண்ணையே நண்பரும் காதலித்ததால் ஆத்திரமடைந்த இளைஞரின் செயல் அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web