பழங்கள், பொருட்கள்.. ஆடு, பைக் என 1 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த தாய்மாமன் சீர் வரிசைப் பொருட்கள்... வாயைப் பிளந்த கிராம மக்கள்!

 
தாய்மாமன் சீர்வரிசை

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் காதணி விழாவுக்கு மாட்டு வண்டிகள் அணிவகுத்து வர தாய்மாமன்களின் சீர்வரிசை தட்டுகளைச் சுமந்து மண்டபத்துக்கு வந்த பெண்கள் கூட்டத்தைப் பார்த்து வியந்து தான் போனார்கள் மக்கள். புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் இன்ஜினியர் இளையராஜா. மனைவி நவந்தா. இவர்களின் குழந்தைகளுக்கு காதணி விழா நேற்று மாங்காடு மாரியம்மன் முத்துகோயில் மண்டபத்தில் நடைப்பெற்றது. 

தாய்மாமன் சீர்வரிசை
இவ்விழாவையொட்டி தாய் மாமன்களான அணவயல் ஆண்டவராயபுரத்தை சேர்ந்த நவீன்சுந்தர், நவசீலன் ஆகியோர் பாரம்பரிய முறைப்படி 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் அணிவகுத்து வர, செண்டை மேளம் முழங்க, பெண்கள் இனிப்பு, பழங்கள், பூக்கள் நிறைந்த தட்டுக்களை ஏந்தி வர, ஆண்கள் ஆடு. சைக்கிள், பைக் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

மேளதாளம் முழங்க பட்டாசு சத்தத்துடன் சீர் வரிசைப் பொருட்களை மண்டபத்துக்குள் எடுத்துச் சென்றனர். தாய்மாமன்களின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காது குத்தி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தாய்மாமன் சீர்வரிசை

இது குறித்து தாய் மாமன்கள் கூறுகையில், குழந்தைகளின் தாய் வழி தாத்தா மாயழகு கடந்த காலத்தில் மாட்டு வண்டி ஒட்டி விவசாயம் செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் எங்களையும், சகோதரிகளையும் வளர்த்து படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தார். எங்களின்  முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்த மாட்டு வண்டியின் பெருமையை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் சீர்வரிசைப் பொருட்களைக் கொண்டு வந்தோம் என்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web