உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!!

 
உறுப்பு தானம்

சாலை விபத்துக்களில் படுகாயம் அடைபவர்கள் மூளைச்சாவு அடைய நேரிட்டால் அவர்களது உறுப்புகளை தானம் செய்யும் வழக்கம் நம்மிடையே அதிகரித்து வருகிறது. இதனை ஒரு திட்டமாக அறிவித்து தமிழகத்தை முண்ணனி மாநிலமாக்க  முதல்வர் அதிரடி காட்டியுள்ளார். அதன்படி இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

இதுகுறித்து தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்  “, உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் தமிழகம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.இந்தியாவின்  முன்னோடி  மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

ஸ்டாலின்


தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்பவர்களின்  தியாகத்தினைப் போற்றிடும் வகை செயப்பட்டுள்ளது. அதன்படி   இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!